திண்டுக்கல் மாவட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட அளவிலான பெஞ்ச்பிரஸ் மற்றும் டெட்லிப்ட் போட்டியில் திண்டுக்கல் அர்னால்டு ஜிம் சாம்பியன்ஷிப் பெற்றது.
திண்டுக்கல் மாவட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட அளவிலான பெஞ்ச்பிரஸ் மற்றும் டெட்லிப்ட் சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கல் வி.சி. மஹாலில் நடைபெற்றது. இப்போட்டியில் 20 அணிகள் பங்கு பெற்றன. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் டாக்டர். லயன். என்.எம்.பி. காஜாமைதீன் கலந்து கொண்டு டீம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற அர்னால்டு ஜிம் அணிக்கு பதக்கமும் , சான்றிதழும் , கோப்பையும் வழங்கினார். இரண்டாவது இடம் மசில் ஜிம் அணி
பெற்றது. இப்போட்டியில் பயிற்சியாளர்கள் ஜான் வில்லியம் லாரன்ஸ், ராஜ்குமார், சதீஷ்குமார், அசோக் குமார் ,விக்னேஷ், பைசல், சமூக ஆர்வலர் சாதிக்,
தேசிய நடுவர் கேசவகிருஷ்ணன் ஆகியோர் பங்கு கொண்டு போட்டியினை சிறப்பித்தார்கள்.