ராமநாதபுரம், டிச.24-
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் 26-12-2024 அன்று நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து பக்தர்கள் வேண்டுதல் உடன் விரதம் இருந்து அபிஷேக நெய் சுமந்து கொண்டு பாத யாத்திரை சென்றனர்.
ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில்
பல வருடங்களாக இராமநாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக ஶ்ரீஐயப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிஷேகத்திற்கு நெய் கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மண்டல பூஜை அபிஷேகத்திற்கு
காலை சரியாக 5:30 மணிக்கு இராமநாதபுரம் ஶ்ரீ மல்லம்மாள் காளியம்மன் ஆலயத்திலிருந்து ஆன்மீகப் பெருமக்கள் பாதயாத்திரையாக அபிஷேக நெய் சுமந்து கொண்டு ஊர்வலமாக ஐயப்பன் கோயிலை நோக்கி நடந்து சென்றனர். இந்த பாதயாத்திரை ஊர்வலத்தில் ஆன்மீகப் பெருமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடிக் கொண்டு சென்றனர். வழியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை ஆக நெய் சுமந்து வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. ஐயப்பன் கோயிலில் அபிஷேக நெய்யை தலைமை குருசாமி மோகன் சாமியிடம் வழங்கி ஆசீர்வாதம் பெற்றனர். மண்டல பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீ வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.