பரமக்குடி, டிச.24 : பரமக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்தை ஒன்றிய அமைச்சர் ஆய்வு செய்தார்.
பரமக்குடியில் ஒன்றிய அரசு தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னேற விளையும் மாவட்ட திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் செலவில் புதிதாக விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை நேற்று, மத்திய சிறு தொழில், இரும்பு மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீ பூபதி ராஜ சீனிவாச வர்மா ஆய்வு மேற்கொண்டார். கட்டடம் கட்டப்படும் அளவு, தரம், மூலப் பொருள்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும் இதன் மூலம் பயன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பயிற்சி ஆட்சியர் கோகுல் சிங், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலேஷா கெளர், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ், வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய திட்டம்) பாஸ்கர மணியன், பரமக்குடி உதவி வேளாண்மை இயக்குனர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வின் போது உடன் இருந்தனர்.
பட விளக்கம்.
பரமக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஒன்றிய அமைச்சர் ஆய்வு செய்தார்.