பூதப்பாண்டி டிச 24
சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன் மற்றும் பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால இணைந்து கோவையில் நிர்மலா மகளிர் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சியை சார்ந்த
திராவிட முன்னேற்ற கழக அயலக அணியின் மாவட்ட துணை அமைப்பாளரும் மற்றும் ஓமான் சொசைட்டி ஆப் இன்ஜினியரிங் -யின் முக்கிய நிர்வாகியுமான மஸ்கட் V. N. ராஜன்-க்கு சிறந்த சமூக சேவகர் 2024 விருது வழங்கி சிறப்பிக்க பட்டது,
மேலும் தொடர்ந்து சமூக சேவைகள் ஈடுபட்டு வரும்
அன்னாருக்கு 22-ம் தேதி அவருடைய பிறந்த மண்ணாகிய பூதப்பாண்டி பேரூராட்சியில் வைத்து சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன் மற்றும் கேரளாவை சார்ந்த பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால இணைந்து சிறந்த சமூக சேவகர் 2024 விருதினை பெற்றமைக்காக மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது.
நடைபெற்ற பாராட்டு விழாவானது எஸ் .தௌசீப் அகமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர்,மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.சுரேஷ் மற்றும் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் பஷீர், மாவட்ட தி.கா கழகத்தின் மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன், ராஜாக்கமங்கலம் ஊராட்சியின் துணைப் பெருந்தலைவர் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் அணியின் துணை அமைப்பாளர் சரத்குமார், ஆரல் சுரேஷ், டேவிட், தொமுச சார்ந்த கலைச்செல்வன் ரோட்டரி கிளப் ஆப் சேர்மன்.சிம்பொனி ஆவுடையப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியினை எஸ். நாராயணசாமி,சமுக ஆர்வலர், பாரதீய நாட்டுவைத்திய மகாசபை, திருவனந்தபுரம் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.மேலும் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக துவரங்காடு கலாரத்னா டாக்டர்.சிந்துசுப்பிரமணியத்தின் நாட்டியாலயா மாணவிகளின் நடனம் நடைபெற்றது.