தமிழகத்தில் நடந்து முடிந்த 10 -ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவிதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைப்பெற்றது, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான பி.சி.சேகர் தலைமையில் நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழுத்தலைவி திம்மி,கௌரவத் தலைவர் கண்ணன், மூத்த வழக்கறிஞர் அசோகன்,முன்னால் கௌரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னால் உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக 100 சதவிதம் தேர்ச்சி பெற உறு துணையாக இருந்த இருபால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.சி. சேகர் பொன்னாடை போர்த்தியும், கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார், மேலும், இப்பள்ளியில் 449 மதிப்பெண்கள் எடுத்தும், அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவி ரித்திகா மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி.மதியழகன் ஆகியோர் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் துவக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகேசன்,சிவக்குமார், ஆதிலட்சுமி, சேகர் மற்றும் ஆசிரியர்களான சகாய ஆரோக்கியராஜ், சதீஷ், அமலாஆரோக்கியமேரி, முனிராஜ், சிவகுமார், தனஞ்செயன், ஆல்பிரட் டேவிட் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.