திருப்பூர், டிச.21- திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நேற்று திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. அம்பேத்கரை
இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாபதவிவிலகக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் முன்னாள் சேர்மன் ஆர் .கிருஷ்ணன் அவர்களின் ஆலோசனின் படி ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கோபால்சாமி,
V.R.ஈஸ்வரன், மாநகர துணை தலைவர் கதிரேசன், தலைமையில் சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் முத்து நகர் மஸ்தான், மாவட்டச் செயலாளர் பாகனேரி ரவீந்திரன், வர்த்தக அணி பிரிவு ஷேக் தாவூத், மகளிர் அணி விக்டோரியா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுலைமான், ஜெய்லாபுதீன், இளைஞர் அணி அருண், சோஜன் மேத்யூ, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அமித்ஷாவின் உருவ படத்தை கிழித்தும், உருவ படத்தை காலால் மிதித்தும் கண்டன கோஷங்கள் எழுப் பினார்கள்.