குமரி மாவட்ட காடுகளிலிருந்து வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை.
நாகர்கோவில் – டிச – 20,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் குமரி மாவட்ட காடுகளிலிருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கோரி கடுக்கரை புறவு விவசாய சங்க செயலாளர் ஐய்யப்பன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட துணை ஆட்சியர் வினய்குமார் இடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட திடல் மற்றும் கடுக்கரை பகுதிகளில் வனத்துறையிலிருந்து யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து விவசாய நிலங்கள் பயிர்கள் மற்றும் வாழை மற்றும் தென்னை மரங்களை அழித்து நாசம் செய்து விட்டு செல்கின்றன. இந்த யானை கூட்டங்கள் ஊருக்குள்ளும் விவசாய நிலத்திலும் புகுவதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள் . விவசாயிகள் இந்த விலங்குகளுக்கு பயந்து விவசாயம் செய்ய முடியாத சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் இடத்தை பார்வையிட்டு உடனடியாக அதை தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனுவாக அளித்துள்ளார்கள் . அனால் இன்று வரை தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காளி கேசம் அருகாமையில் உள்ள பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சிறுத்தை, புலி மற்றும் யானை போன்ற விலங்குகள் மனிதர்களை கடித்து கை, கால்கள் இழந்தும் மற்றும் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று சூழ்நிலை இந்த திடல் மற்றும் கடுக்கரை பகுதியில் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து கடந்த முறை கொடுத்த மனுவிற்கு இன்று பதில் கேட்க்க இருக்கிறோம். மேலும் மீண்டும் இந்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளோம் . உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தோவாளை ஒன்றிய விவசாயிகள் சார்பாக முதல்வரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வரும் ஒரு பாலம் இருக்கிறது அந்த பாலத்திற்கு முறையான அனுமதி வாங்காமல் கட்டப்பட்டிருக்கிறது. அந்த பாலத்தை அப்புறப்படுத்தினாலே போதும் இந்த யானை கூட்டம் வந்து விவசாய நிலங்களையும் ஊருக்குள்ளே புகுந்து வராது. உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து இடத்தை பார்வையிட்டு அந்த பாலத்தை அப்புறப்படுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாத்திட கேட்டுக்கொள்கிறோம் பலமுறை பல மனுக்கள் கொடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று கடுக்கரை புறவு விவசாய சங்க செயலாளர் ஐய்யப்பன் கூறினார் . உடன் சங்க உறுப்பினர்கள் மகாதேவன் பிள்ளை, தங்கப்பன், அகஸ்திலிங்கம், மணிகண்டன், மற்றும் ஞாலம் ஜெகதீஷ் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.