நாகர்கோவில் – டிச – 20,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள சர் சி வி ராமசாமி ஐயர் பூங்கா முன்பு சட்ட மேதை டாக்டர். அம்பேத்காரை அவமரியாதையாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலகக் கோரி நாகர்கோயில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நவீன் குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், செல்வன், சிவ பிரபு, டாக்டர் சிவகுமார், தங்கராஜ், அதிரம், கண்ணன், இளங்கோ, புகாரி, நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செல்வகுமார், கிளாட்சன், பாபு, வர்க்கீஸ், மகாலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.