நாகர்கோவில் டிச.20
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் அமைப்பாளர் பென்னட் ஜோஸ் தலைமையில் நாகர்கோவில் செட்டிகுளத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரியில்
30/12 /2004 மற்றும் 31/12 /2024 ஆகிய தினங்களில் குமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா நிகழ்வு நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ள நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர்கள் இரு நாட்களும் கலந்து கொள்ளும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை வருகை பதிவேட்டின் நகலுடன் ஒப்படைக்க கேட்டுக் கொண்டுள்ளார். முதலமைச்சர் தலைமையில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா நிகழ்வினை குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஆனால் நிகழ்வில் ஆசிரியர்கள் தன் விருப்பத்தின் பேரில் கலந்து கொள்வார்கள். அதே நேரத்தில் அரையாண்டு தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணி, அடுத்த பருவத்திற்கான கல்வி சார்ந்த முன்னேற்பாடு பணிகளில் இருக்கும் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதை குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. அரசு விதிகள் ஏதுமின்றி ஆசிரியர்களின் சுய விருப்பு வெறுப்புகளில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆசிரியர்களை அடிமைகளாக நடத்துவதை கைவிட வேண்டும் மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடுகள் ஆசிரியர்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கூட்டமைப்பின் தோழமைச் சங்கங்கள் சார்பாகதமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அரசு உதவி பெறும் பள்ளிச் செயலாளர் அஜின்,
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார்,
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வேலவன், நாகர்கோவில் கல்வி மாவட்டத் தலைவர் ராகேஷ், தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் டோமினிக்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் சுமகாசன்,
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் செம்பியன்,
மூட்டா அமைப்பின்நான்காம் மண்டல செயலாளர் மகேஷ், மற்றும் ராஜு, ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவரும் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளருமான ஸ்டீபன்
நன்றி கூறினார்.