தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில்
திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு,ஆய்வு செய்தார்
தஞ்சாவூர். டிச. 20.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து துறை திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுமுன்னதாக வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வித்தரம் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி பஸ் நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிவறைகள் இலவச கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரமும் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம்,பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன்,வல்லம் பேரூர் செயலர் டி கே எஸ் ஜி கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.