தஞ்சாவூர், மே.12-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பு!!
கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவு!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களி ல் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் உப்பு கரைசல் வழங்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறி உள்ளார் மாவட்டஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:
வெப்ப அலையின் தாக்கம் அதி கரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், சாலையோர இடங்கள், கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாநகரா ட்சி, நகராட்சி முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து சுகாதா ரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது சுகாதாரமான குடிநீர் வழங்குவ துடன் கூடுதலாக உப்பு சர்க்கரை கரைசல் பவுடர் வழங்கப்படுகிறது. ஆற்றுப்படுகை போன்ற வனப்பகு திகளில் காட்டுத்தீ ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளவும். வன விலங்குகள் இருக்கும் இடங்களில் போதிய அளவில் தண்ணீர் வழங்கி டவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது மக்கள் வழிபாட்டிற்க்காக அதிக மாக கூடும் கோவில்களில் சாமி யானா பந்தல் அமைத்து குடிநீர் வழங்கிடவும் ,உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்து நியாய விலை கடைகளிலும் பொதுமக்கள் பாதிக்காதவாறு சாமியானா பந்தல் அனைத்து குடி நீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனை மற்றும் தொழிற் சாலைகளில் தீ பாதுகாப்பு தொடர் பான நிலையான வழிகாட்டு நெறி முறைகள் செயல்படுத்துவதை கண்காணித்தல் மற்றும் தீ விபத்து களை தடுப்பதில் உரிமம் வைத்திரு ப்பவர்களை கண்டறிதல். ஆகிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் துறை பாதுகாப்பு குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. இந்த குழுவினருக்கு மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளில் மின் கசிவு மற்றும் தீ விபத்துகள் ஏற்படா மல் இருக்க ஆய்வு பணியில் மேற் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டுதீ ஏற்படாமல் இருக்க மாவட்ட அளவி லான குழு நியமனம் செய்யப்பட்டு வனப்பகுதிகள் கண்காணித்திட வும் நிர்வாகித்திடவும் ஆணையிட ப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திட ஏதுவாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை கள் கொண்ட வார்டு திறக்கப்பட்டு ள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல் லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் வெப்ப அலை தாக்க ம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் .தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவும், வெளி நோயாளிகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. வெப்ப அலை தாக்கம் தொடர்பாக கால்நடை வளர்ப்போர் க்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப் பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ள தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.