திருப்பத்தூர்:டிச:18, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்
மேலும் கே.சி வீரமணி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன் காரணமாக கே.சி.வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
விசாரணையில் கே.சி.வீரமணி பிரமாணப் பத்திரத்தில் சொத்துக்களை
மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது
மேலும் கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் வழக்கு தொடர்ந்தார்.
இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் நாட்டிலேயே
முதன்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கே சி வீரமணி ஆஜராகினார் இதன் காரணமாக அவருக்கு ஆதரவாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் உடன் இருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.