ஊட்டி. டிச.18
ஒரு காலை இழந்த மாற்று திறனாளி தன் சொந்த காலில் நிற்க,கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்தும் பலனில்லாமல்,மீண்டும் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வரும் சம்பவம் அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
உதகை பட்பயரை சேர்ந்த பெலிக்ஸ் என்பவர் பிறவியிலேயே ஒரு காலை இழந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர், இவரை பராமரிக்க தற்போது ஆள் இல்லாததால்
பிங்கர் போஸ்ட் பகுதியில் சில்லரை கடைவைத்து ,
சொந்தகாலில் நிற்க ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாண்டு காலமாக மனு அளிக்க வந்து செல்கிறார்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடு்க்காததால் மிகுந்த மன அழுதத்துடன் மீண்டும் இன்று மனுகொடுக்க வந்தார்.
மக்கள் குறை தீர்பதற்காக நடைபெறும்,இதுபோன்ற கூட்டங்களில் , ஒரு காலை இழந்த நிலையில் சொத்தக்காலில் நிற்க முயற்சிக்கும் இந்த மாற்றுதிறளாளி மனு மீது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.