மார்த்தாண்டம், டிச- 16
மார்த்தாண்டம் அருகே கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (55). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் மாலையில் மைதின் கான் (39) என்ற பயணியுடன் சிராயன்குழி என்ற பகுதியில் வைத்து திடீரென சிகனல் காண்பிக்காமல் அந்த ஆட்டோவை டிரைவர் திருப்ப முயற்சித்தார். அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மினி டெம்போ ஒன்று ஆட்டோ மீது மோதி தள்ளியது.
இதில் ஆட்டோ கவிழ்ந்து சேதமடைந்தது. ஆட்டோவில் இருந்த டிரைவர் உட்பட 2 பேரும் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு இருவரையும் அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ராஜேந்திர பிரசாத் மேல்சிகிட்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.