கிருஷ்ணகிரியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணகிரி தனியார் மண்டபத்தில்
ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இக்கூட்டம் மாவட்ட செயலாளர்கள் வஜ்ரவேல், மனோகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தலைவர்கள் அண்ணாதுரை, குணசேகரன், மாதவன் ஆகியோர் தலைமையில் கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர் ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சிறப்பு அதிக அளவில் இளைஞர்கள் தான் என்று இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம் கொண்டார்.
மாவட்ட பொருளாளர்கள் சிவப்பிரகாசம், ரவி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், குபேந்திரன், பார்த்திபன், திருப்பதி, அண்ணாமலை, சரவணன், ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உத்திரகுமார், இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் இளையராஜா மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.