பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்கள் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் அருட்தந்தை ஜேசு நேசம், ஜெலாஸ்டின், ஜாண் உபால்ட், அமல்ராஜ் ஆசிரியர் அலுவலர் செயலாளர் முனைவர் ஜாண் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் இறைவணக்கம் பாட, மாணவர்
அர்ஷத் அகமது அனைவரையும் வரவேற்றார். மாணவர் மார்க்ளின் லிஜோ கிறிஸ்து பிறப்பு செய்தியை கூறினார். மாணவர் சரோரி ஜாக் குழுவினர் கிறிஸ்மஸ் கீதம் இசைக்க மேரட் ஷபின் பெர்னாண்டோ குழுவினர் பாடல் பாடினர். நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான
நாஞ்சில் வின்சென்ட்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு
மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார்.
கிறிஸ்மஸ் தாத்தா வருகை புரிந்து மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்து சிறப்பித்தார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் சே.ச. ஆசியுரை வழங்கினார்.
மாணவர் ஜெப ஆரோன் நன்றி கூறினார். தலைமையாசிரியர் வழிகாட்டலின் படி
ஆசிரியர்கள் ஜார்ஜ் விஜயன், சுந்தர் சிங்,
டைட்டஸ், சவரிமுத்து மைக்கேல், மெர்லின், பரமேஷ், தினேஷ்
ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.