கருங்கல், டிச- 14
பாலப்பள்ளம் பேரூராட்சியில் அரசு ஆணைக்கு முரணாக அநியாயமாக உயர்த்திய வீட்டுவரியை திரும்ப பெற வேண்டும், தவறான வரிவிதிப்பால் உயர்த்தி வசூலித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும், குறும்பனை பகுதி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணவும், தெருவிளக்கு சீரமைக்கவும், வரிவசூலித்தும் குப்பை மேலாண்மை பணி செய்யபடாத பேரூராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி கிளைகள் சார்பாக பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகமுன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (13-ம் தேதி) காலை நடைபெற்றது.
முன்னாள் பேரூராட்சி தலைவர் கில்டா ரமணிபாய் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தொடங்கிவைத்து பேசினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், கிள்ளியூர் கிழக்கு வட்டார செயலாளர் ராஜா, முன்னாள் கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் சாந்தகுமார்,மாவட்ட குழு உறுப்பினர் ஜோயல்,சகாயபாபு ,சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சோபனராஜ், வார்டு உறுப்பினர் மார்டின்மேரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். போராட்டத்தில் முருகேசன், லியோண், பெர்க்மான்ஸ், காஸ்ட்ரோ, ஆரோக்யம்,ராஜஜீவா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.