தஞ்சாவூர். டிச.13
தஞ்சாவூர் அடுத்துள்ள பூண்டி ஏவிவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரியும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி இரத்தவங்கியும் இணைந்து இரத்த தான முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கரன் தலைமையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளையின் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் யூத் ரெட் கிராஸ் தஞ்சை மாவட்ட அமைப்பாளரும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியருமான முருகானந்தம் ஆகியோர்கள் துவங்கி வைத்தார்கள். கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர் சந்திரன், தஞ்சை மருத்துவ கல்லூரி இரத்தவங்கி குருதிமாற்று அலுவலர் மருத்துவர் கிஷோர்குமார், தஞ்சை டெல்டா ரோட்டரி கிளப் கவர்னர் அண்ணாமலை, தலைவர் முனைவர் தனராஜ், செயலாளர் மருத்துவர் ராஜ்மோகன் மற்றும் பொருளாளர் பொறியாளர் சரவணன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய மாணவ மாணவிகளை வாழ்த்தி பாராட்டினார்கள்.
இந்த இரத்ததான முகாமை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் சங்கர் சிறப்பாக செய்து இருந்தார். 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.