கோவை டிச:13
கோவை நவ இந்தியா பகுதியில் அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய அனுபவ மையம் திறப்பு விழா அல்ட்ரா வயலட் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான நாராயண் சுப்பிரமணியம் தலைமை வகித்து அனுபவ மையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இது குறித்து அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நீரஜ் ராஜ்மோகன் கூறுகையில் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய அனுபவ மையம் கோவையில் திறந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த அனுபவம் மையமானது திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
எங்களது நிறுவனத்தின் முதன்மை மோட்டார் சைக்கிளான எப்77 மேக்2 குறித்தும் அதன் தொழில்நுட்பம் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக விளக்கும் வகையில் இந்த அனுபவ மையம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் புதிய அனுபவ மைய அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.