திண்டுக்கல், மே 12
வேடசந்தூர் எஸ். ஆர். எஸ் வேளாண் கல்லூரி மாணவர்களான ஜான் மெல்வின், கார்த்திக் ராஜா, கார்த்திக், கவின் ராஜ், கிஷோர், லக்ஷ்மி நாராயணன், லோகேஷ் குமார், லோகேஷ், முகமது யாசீன் ஆகியோர் நிலக்கோட்டை அருகே அணைப் பட்டியில் மழை நீரை சேகரிக்கும் முறை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். மழை நீரை சேகரிக்கும் முறை என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.