நாகர்கோவில், மே 11,
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக திகழ்ந்து வருகிறது. உள்ளூர் விற்பனை மட்டுமல்ல கேரள மாநிலம் முழுவதும் அதேபோன்று வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினசரி பூக்கள் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் மிக முக்கிய வர்த்தக மையமாக அமைந்துள்ளது. நிலக்கோட்டை ஓசூர் திண்டுக்கல் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி பல டன் பூக்கள் தோவாளை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பண்டிகை காலங்கள் விசேஷ காலங்களில் பூக்களின் விலை மூன்று மடங்கு நான்கு மடங்கு விலை உயர்வது வழக்கம் –
அந்த வகையில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு அனைத்து தங்க நகை கடைகளிலும் சிறப்பு விற்பனை நடைபெற்றது. அனைத்து கடைகளை முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்து பூஜைகளுக்கும் பூக்களை பயன்படுத்துவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது அனைத்து பூக்களும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது 500 ரூபாய்க்கு விற்ற பிச்சி பூ 2000 ரூபாய் ஆகும் 500 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ 1500 ரூபாயாகவும் 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ 700 ரூபாயாகவும் 200 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம் ஆயிரம் ரூபாயாகவும் 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ 300 ரூபாயாகவும் 100 ரூபாய்க்கு விற்ற ரோஜா 300 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது அட்சய திருதியை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரிப்பால் தோவாளை பூச் சந்தையில் பூக்களின் விற்பனையும் களை கட்டியது.