திண்டுக்கல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞரணி அலுவலர் சரண் வி கோபால் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ. இளமதி, வருவாய் பிரிவு அலுவலர் ஆர். சக்திவேல் திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய உதவி இயக்குனர் எஸ். பிரபாவதி, எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர். கே. நாகநந்தினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனிநபர் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5000, இரண்டாம் பரிசாக 2500, மூன்றாம் பரிசாக 1500, கிராமிய நடன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 7000, இரண்டாம் பரிசாக 5000, மூன்றாம் பரிசாக 3000,
, அறிவியல் புதுமைகள் கண்காட்சி குழுவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 7000 ,இரண்டாம் பரிசாக 5000 ,மூன்றாம் பரிசாக 3000 , அறிவியல் புதுமைகள் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3000, இரண்டாம் பரிசாக 2000, மூன்றாம் பரிசாக 1500 ,
தனி நபர் இளம் ஓவியர்களுக்கான வரைதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2500 ,இரண்டாம் பரிசாக 1500 , மூன்றாம் பரிசாக 1000 ,
, தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் இளம் எழுத்தாளர்களுக்கான கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2500, இரண்டாம் பரிசாக 1500 , மூன்றாம் பரிசாக 1000 ,
, மொபைலில் புகைப்படம் எடுத்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2500 ,இரண்டாம் பரிசாக 1500, மூன்றாம் பரிசாக 1000 ,
ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை களப்பணியாளர்
எம்.ராகவன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் கணக்கு மற்றும் திட்ட உதவியாளர் ஆர். மகேஸ்வரன் நன்றி கூறினார்.