வயநாடு, டிச.11-
கேரள மாநிலம் வய நாட்டில் நிலச் சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு தமுமுக அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வயநாடு மாவட்டம் மூப்பநாடு ஜூபிலி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தலைமையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி மதம் பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கி கல்பட்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்திக் உரையாற்றினார்.
நாடாளுமன்ற இடைத்தேர்தல் குறிக்கிட்டதால் நிவாரண உதவிகள் தடைப்பட்டதாகவும் அதனை மீண்டும் தமுமுக தொடங்கியிருக்கிறது.
தமுமுகவிற்கு வயநாடு மக்கள் நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்று அவர் பேசினார்.
தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, மமக பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாநில பொருளாளர் உமர் ஹாஜியார், மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஹமீது, தலைமை பிரதிநிதிகள் கோவை அக்பர், சுல்தான் அமீர் மற்றும் மாவட்ட தலைவர்கள் அணி நிர்வாகிகள் முன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் தமுமுக தலைமை பிரதிநிதிகள் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீதி உதவிகள் வழங்கப்பட்டது.