கருங்கல், டிச- 10
சோனியா காந்தியின் அவர்களின் 78 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று 8-ம் தேதி மதியம் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் அருகே வெள்ளியாவிளை புனித அன்னம்மாள் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் கலந்து கொண்டு புனித அன்னம்மாள் இல்லத்தில் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டினார்.
பின்னர் குழந்தைகளுக்கு பிரிண்டர் மற்றும் கர்மவீரர் காமராஜர், ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சிறுமியர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.