ஈரோடு டிச.10
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2023-2024-ம் ஆண்டில் 8,260 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2023-2024-ம் நிதியாண்டில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70,94,934 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7,50,522 மதிப்பீட்டில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் என 72 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78,45,456/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2024-2025-ம் நிதியாண்டிற்கு 349 இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 2 தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படவுள்ளது.
பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயனடைந்து வரும் திமுபாரக் அலி என்பவர்
தெரிவித்ததாவது,
நான் கொடுமுடி வட்டம், காசிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். ஊஞ்சலூர் பகுதியில் சிறு தொழில் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வருகிறேன். மாற்றுத்திறனாளியான எனக்கு நாள்தோறும் வேலைக்கு சென்று வருவது சிரமாக இருந்து வந்தது. மற்றொருவரின் உதவியுடன் மட்டுமே சென்று வர முடிந்தது. தற்பொழுது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
நாள்தோறும் கடைக்கு சென்று வருவதற்கு பயனுள்ளதாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் தமிழ்நாடுமுதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் .