திருப்பத்தூர்:டிச:8,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குறைதீர்வு கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவை செய்தமைக்காக திருப்பத்தூர் இந்திய செஞ்சிலுவை சங்கம் திருப்பத்தூர் மாவட்ட கிளைக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இவ்விருதினை மாவட்ட சேர்மன் கிஷோர் பிரசாத் , துணை சேர்மன் சத்தியமூர்த்தி, மாநில உறுப்பினர் முருகன், வாணியம்பாடி தாலுகா சேர்மன் வடிவேல் சுப்பிரமணியன், திருப்பத்தூர் கிளை சேர்மன் குடியண்ணன், நாட்றம்பள்ளி கிளை சேர்மன் விஜய் ஆனந்த், ஆம்பூர் கிளை சேர்மேன் நேதாஜி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரகாசம், பார்த்திபன், பாண்டியன், கலையரசி மற்றும் உறுப்பினர்கள் அமலா, சந்திரசேகர், சுரேஷ்குமார், புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்