மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டதால் அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு. மயிலாடுதுறை கோட்டாட்சியர் (பொறுப்பு) அர்ச்சனா தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்:- மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு:-
2021-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தில் இருந்து மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு ஊராட்சி பட்டவர்த்தி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போது வரை அப்பகுதியில் அரசு தரப்பில் அம்பேத்கர் பிறந்த தினம் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பட்டவர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு அம்பேத்கர் திருவுருவ படம் வைக்கப்பட்டு அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் (பொறுப்பு) அர்ச்சனா, மாவட்ட காவல்துறை ஏடிஎஸ்பி ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரு தரப்பினரையும் சேர்ந்த 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பபு கேமரா வைக்கப்பட்டு, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.