அரியலூர், மே 11,
மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
கடந்த 03.05.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட மாணவ மாணவிகளுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கியும், பதக்கம் அணிவித்தும் பாராட்டினார்கள்.
மேலும் இம்மாத இறுதியில் புனே மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.
இந்நிகழ்வின் போது அரியலூர் மாவட்ட குத்துச்சண்டை தலைவர் சென்சாய் ரங்கநாதன்,துணைத் தலைவர் நிர்மலா மேரி மற்றும் பிற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர்கள்:
ராஜ்கிரண், அமராவதி, எம்எஸ்.ஆதிர சகானா,ரிஷிகா,எழில் பாத்திமா, ரேவந்த் ஃபேட்டரிக், பிரகாஷா, ரிஷியா ஆகியோர் முதல் பரிசினை பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.