குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவுப்படி வேலிமலை வனச்சரக அலுவலர் என். இராஜேந்திரன் தலைமையில் நேற்று வேளிமலை வனச்சரக பணியாளர்கள், NGO -க்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, லெமூர் பீச் முதல் ராஜக்காமங்கலம் வரை உள்ள கடற்கரை சாலைகள் முழுதும் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்தத் தூய்மை பணியின் போது எண்ணற்ற பிளாஸ்டிக் நெகிழிகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், கண்ணாடி குப்பிகள் போன்றவை முழுமையாக சேகரிக்கப்பட்டது.
சுமார் ஒரு டன் அளவுள்ள கழிவு பொருட்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.