சென்னை ஆவடியில்
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள்,
ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில்
ஆலயத்தில் அமைந்துள்ள அனைத்து சன்னதிகளுக்கும் திருக்குட முழுக்கு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
மேலும்
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து சுவாமி அலங்காரமும் அபிஷேக ஆராதனைகளும், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் அதன் தொடர்ச்சியாக சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய தலைவர் எம்.லோகநாதன், செயலாளர் எஸ்.லட்சுமிபதி, பொருளாளர் கே.பாண்டியன், கௌரவத் தலைவர் ஏ.இ.கஜேந்திரன் மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.