பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 06 அன்று ‘பாசிச எதிர்ப்பு தினம்’ என்கிற பெயரில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன்படி தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் சிறப்பு விருந்தினராக எஸ்.டி.பி.ஐ.கட்சியின்.முன்னாள் மாநில தலைவர் தெகலான்பாகவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்ட்திற்கு பின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தெகலான் பாகவி செய்தியாளர்களிடம் கூறும்போது, பாபர் மசுதி இடிப்பு வழக்கில் ஒரு பள்ளிவாசல் தானே விட்டு கொடுக்கலாமே என்று தெரிவித்தனர். ஆனால் தற்போது 19 பள்ளிவாசலுக்கு உரிமை கோருகின்றனர்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய; மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
இதில் எஸ்.டி.பி.ஐ.நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.