மதுரையில் வைகை மீட்டர் ஆட்டோ சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடல் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழச்சியில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், வைகை மீட்டர் ஆட்டோ கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் மிகச் சிறப்பான தங்களது சேவைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட சமூகப்பணிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது. தொடர்ந்து அவர்களுடைய செயல்பாடுகள் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுடைய சேவைகள் தொடர வாழ்த்துகிறேன் என கூறினார். இதனை தொடர்ந்து மறைந்த ஆட்டோ தொழிலாளர் ராஜா அவரின் மனைவி சண்முகவடிவிடம் 10 ஆயிரம் ரூபாயை ஜிபி ராஜா
நிதியுதவி வழங்கி, பிள்ளைகளின் மேல்படிப்பிற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார். இதனையடுத்து வைகை மீட்டர் ஆட்டோ தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த நிதியிலிருந்து கொடுக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை மறைந்த ஆட்டோ தொழிலாளர் ராஜா அவரின் மனைவி சண்முகவடிவிடம் ஜிபி ராஜா முன்னிலையில் வைகை மீட்டர் ஆட்டோ செயலாளர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் விளாங்குடி வேல்முருகன், துணைத்தலைவர் துரைச்சாமி, பொருளாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.
இந்நிகழச்சியில் திமுக கூடல் நகர் அம்சவேல்பாண்டி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சி.ஐயப்பன், மாநகர் மாவட்ட பெத்தானியாபுரம் இளைஞரணி சேதுபதி மணி, வழக்கறிஞர் முகமதுமன்சில், வைகை மீட்டர் ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.