ராமநாதபுரம், டிச.9-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின்
இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் பரமக்குடி ஏவிஎம் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செந்தாமரை, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சங்கம் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற எடுக்கபட்டு வரும் தீவிர முயற்சிகள், சங்கம் உறுப்பினர்களுக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து விரிவாக பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ,மாவட்ட பொருளாளர் சிவசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துவழிவிட்டான், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் ஊராட்சி செயலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.