மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சி வீராபுரம் பாரதியார் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா ஆலய தலைவர் வெங்கடேசலு, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சிவகுமார் மற்றும் ஆலய நிர்வாகிகள், கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அனுக்ஞை, கிராம தேவதை வழிபாடு, கோபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சங்கல்பம், நவக்கிரகம் ஹோமம், பூர்ணாஹீதி, கரிகோலம், கண்திறத்தல், சயனாதிவாசம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், மருந்து சாற்றுதல், நாடிசந்தானம், தத்வார்ச்சனை, யாத்ராதானம், கலசபுறப்பாடு, நான்கால யாகசாலை பூஜைகள் போன்ற பல்வேறு சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் கலசங்களை மேளதாளத்துடன் ஆலய மாடவீதி உலாவந்து ஆலயகுருக்கள் மல்லிகார்ஜீனன், சர்வசாதகர் கார்த்திக் குழுவினர்கள் ஆலய விமானம், மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதணை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புனிதநீர் பக்தர்கள் மீது தெளித்தனர். பின்னர் மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆன்மீகவாதிகள் திரளாக கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.