அரியலூர், டிச;09
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த
முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து
வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் / எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் / எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்; பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
01.01.2025 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025-ஆம் ஆண்டில் 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 28.11.2024 வரை படிவங்களை பெற்று படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களிடமிருந்து படிவம் 6 -10,691, படிவம் 7 -922, படிவம் 8 – 5974 என மொத்தம் 17,587 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி, நாகமங்கலம் இந்திரா நகர் மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் / எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டு புதிதாக விண்ணப்பம் செய்துள்ள வாக்காளர்களின் வயது, முகவரி ஆகியவை குறித்தும் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்யவேண்டி விண்ணப்பித்துள்ளவர்களின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்