திருப்பத்தூர்:டிச:7, திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் காணொளி உரையினை தொடர்ந்து,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ்,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் பால்வளத் துறைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், சேர்மன் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா 6 பயனாளிகளுக்கும், தையல் இயந்திரம் 20 பயனாளிகளுக்கும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு வேலை பணி நியமனத்திற்கான ஆணையும், பழங்குடியினர் நலத்துறை நல வாரிய அட்டை 50 பயனாளிகளுக்கும், தாட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு தொழில் வணிகத்துறை, வேளாண்மை துறை, சுற்றுச்சூழல், முன்னோடி வங்கி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு துறைகளின் மூலம் 1031 பயனாளிகள் வீதம் ரூபாய் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு வளர்ச்சி அஞ்சலி செலுத்தி பேசுகையில்: டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒளித்து நின்றவர். சமூக சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர். ஏழை எளிய மக்களின் துயரினை போக்கியதோடு, பெரும் துயரத்திலும் அடைய முடியாத இடத்தை வரலாற்றில் இடம் பிடித்தவர். உலக அளவில் பெரும் மாற்றத்தை உருவாக்கி சிந்தனையை விதைத்தவர். முடியாது என்றவர்கள் மத்தியில் முடித்துக் காட்டியவர். தம்முடைய கல்வியின் திறத்தால் சம கல்வி உரிமையை பெற்றுத் தந்ததோடு, இவரை படிக்காமல் எந்த செயலும் செய்ய முடியாது என்கிற பெரும் அங்கீகாரத்தை நிலை நாட்டியவர் என்று நினைவு கூர்ந்து பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கதிர் சங்கர், மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செந்தில்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நாட்டுப் பன்னுடன் முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.