ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கணிதவியல் துறை சார்பில், எஸ்இஆர்பி, டிஆர்டிஓ & எம்ஓஇஎஸ் நிதியுதவியுடன், திரவ இயக்கவியல் பயன்பாடு (”ப்ளுயட் டைனமிக்ஸ் பயன்பாடு”) என்ற தலைப்பில், மூன்று நாட்கள் சர்வதேச மாநாடு – ஐசிஏஎப்டி-24). வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
வேந்தர் பேசுகையில் “அறிவு என்பது தனிமனிதனிடம் இருந்து வராது, உலகம் முழுவதிலும் உள்ள பல துறைகளைக் கொண்ட மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும்” என்றார்.
துணைத் தலைவர் முனைவர் எஸ், சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேம்பாடு குறித்து துணைவேந்தர் உரையாற்றுகையில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஹெச்-இன்டெக்ஸ் 110 ஆகும்” என்றார்.
ஆராய்ச்சித் துறை இயக்குநர் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன் வரவேற்றார்.
முனைவர் பி. ரெட்டப்பா, மூன்று நாள் மாநாட்டையும், மாநாட்டின் நோக்கத்தையும் விவரித்தார்.
டீன், சி. ராமலிங்கன், தலைமை விருந்தினரையும், அனைத்துப் பேச்சாளர்களையும் அறிமுகப்படுத்தினார், திரவ இயக்கவியல் பற்றிய மொத்தம் 206 ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் பெறப்பட்டுள்ளன என்றார். துறைத்தலைவர் முனைவர் எம். காமேஸ்வரி கெளரவ விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
விஞ்ஞானிகள், முனைவர். ஆர். பன்னீர்செல்வம், ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகம், யு.எஸ்.ஏ., முனைவர் நாகராணி போனகலா, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகம், முனைவர் கட்டா ரமேஷ், சன்வே பல்கலைக்கழகம், மலேசியா, முனைவர் ஸ்ரீதர ராவ் குணகலா, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகம் , முனைவர் விக்டர் ஜாப், வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகம், முனைவர் சுமோன் சாஹா, பங்களாதேஷ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மற்றும் தன்பாத், உத்தரகாண்ட், கேரளா, வாரங்கல், பாட்னா, புனே மற்றும் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்று, திரவ இயக்கவியல் குறித்த தங்கள் ஆராய்ச்சிகள் குறித்துப் பேசினர்.
சிறப்பு விருந்தினர் திரு ஆர்.கே. ராமச்சந்திரன், இனண இயக்குனர் – ஹெச்ஆர், டெலாய்ட் ஷேர்டு சர்வீசஸ் இந்தியா எல்எல்பி, சென்னை, தனது தொடக்க உரையில், தற்போது “மாணவர்களின் புராஜக்ட்கள் தொழில்மயமாக்கப்படுவதில்லை, மேலும் தொழிற்சாலைகளிலுள்ள புதுமைகள் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்றார். மாநாட்டு கட்டுரை மலரையும் சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
கெளரவ விருந்தினர், கனடா, விண்ட்சர் பல்கலைக்கழகம், முனைவர் ராம் பாலச்சந்தர் பேசுகையில் “மாணவர்களிடம் அனைத்து வகுப்புகளிலும், ஆய்வகங்களிலும் கேள்வி கேட்க வேண்டும், இதுவே அவர்களை சிறந்த கண்டுபிடிப்பாளர்களாக மாற்றும்” மற்றும் “அனைத்து துறைகளிலும் உள்ள அடிப்படைக் கொள்கைகள் மாணவர்களுக்கு புரியும் வகையில்” வகுப்புகள் செயல்பட வேண்டும் என்றார்.
பேராசிரியர் கே.கருப்பசாமி நன்றி கூறினார்.
ஸ்கூல் ஆப் அட்வான்டஸ்டு சயின்ஸ் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்.