நாகர்கோவில் மே 10
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் அருகே மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி நிலை தடுமாறி மின்மாற்றி மற்றும் இரண்டு மோட்டார் பைக்கிலும் இடித்து தள்ளி விபத்து டிரைவர் தப்பி ஓடியதால் பரபரப்பு.
டாரஸ் லாரிகளின் அதிக வேகமாக செல்வதாலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதாலும், மது போதையில் வாகனம் ஓட்டுவதாலும் சாலையில் டாரஸ் லாரி வருவதைப் பார்க்கும் பொதுமக்கள் சாலையில் செல்ல கடும் கலக்கத்திலும் பீதியிலும் உள்ளனர். விபத்தும், உயிர்பலிகளும் அதிகாரித்தும் காவல் துறை நடவடிக்கை என்னவோ மந்த நிலையிலே இருப்பதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு டாரஸ் லாரியில் மூலம் கனிமங்களக் கடத்தல் அதிகரித்து வருகிறது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கனிம வளங்களுடன் வரும் டாரஸ் லாரிகள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தான் கேரளாவுக்கு செல்கிறது இதனால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது – டாரஸ் லாரிகளின் அதிக வேகம் காரணமாக ஏராளமான விபத்துகளும் உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கூட புத்தேரியில் டாரஸ் லாரி மோதி அரசு ஊழியர் ஒருவர் பலியானார் 2 மாதத்தில் மட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி வெட்டூர்ணிமடம் அருகே வரும்போது வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி, நிலை தடுமாறி சாலை ஓரம் நின்ற மின்மாற்றியில் மோதி விபத்து ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த இரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் டாரஸ் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார் டாரஸ் லாரிகளின் அதிக வேகம் காரணமாக சாலையில் செல்ல மக்கள் பீதி அடைந்து உள்ளனர் விபத்தும் உயிர்பலிகள் அதிகாரித்தும் காவல் துறை நடவடிக்கை மந்த நிலையிலே இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.