மதுரை டிச:-06
மதுரை எஸ்.எஸ்.
காலணி பகுதியில் அத்து மீறி வீடு புகுந்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவருக்கும் இரண்டு பெண்குழந்தை களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் மதுரை எஸ்.எஸ்.காலனிபகுதியை சேர்ந்த தீபா (வயது 43). என்பவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-
மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வரும் நானும் எனது கணவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம் இந்த நிலையில் கடந்த (4-12-24)அன்று மதியம் சுமார் 11-30 மணியளவில் நான் அலுவலகத்தில் இருந்த சமயம் எனது கணவர் முத்துராமலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அத்து மீறி வீட்டில் நுழைந்து எனது கணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இது குறித்து அருகில் இருந்த நபர்கள் எனக்கு தகவல் கூறியதின் பேரில் நானும் உடனடியாக அவசர போலீஸ் உதவி எண்ணுக்கு தகவல் கூறி சம்பவ இடத்திற்கு நான் சென்ற பொழுது மேற்படி இரண்டு நபர்களும் சேர்ந்து என் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டி
எனது கணவரின் செல்போனையும் ரொக்க பணம் ரூபாய் ஒரு லட்சத்தையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
எனவே கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.