டிச 06
டெல்லி
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
இந்தியாவின் 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சூரியனின் வளிமண்டலம் மற்றும் கரோனா பகுதியை ஆய்வு செய்வதற்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்தது.
அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோதான் இந்த ப்ரோபா 3 இரட்டை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
அதாவது இஸ்ரோவின் பாகுபலி என அழைக்கப்படும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்தான் இந்த செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டானது ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
ப்ரோபா 3 திட்டத்தில் ஒளிவட்டப்பாதையை குறிப்பிடத்தக்கது. ஆய்வு 2 செயற்கைக்கோள்கள் சூரியனின் செய்ய செலுத்தப்பட்டது என்பது இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சியால் செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இது நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதும் வெற்றி பெறுவதும் பெருமைக்குரியது.
இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிக்கும் வெற்றிக்கும் உதவிக்கரமாக பணியாற்றியவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
உலகமே பாராட்டும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவின் 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பையும் தொடர் முயற்சியையும் மேற்கொண்ட இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளை தமிழ் மாநில காங்கிரஸ்
சார்பில் பாராட்டி வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.