மதுரை டிசம்பர் 4,
மதுரை மாநகர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி இணைந்து
மதுரை காளவாசல் பை பாஸ் ரோட்டில் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், அமைக்கப்பட்ட நடமாடும் உணவுக்கூடங்கள், துரித உணவக கடைகள் வாகனங்களால் மாலை நேர நொறுக்கு தீனி கடைகள் போன்றவற்றால் அதன் உரிமையாளர்கள்,வாடிக்கையாளர்கள், வாகனங்கள் பைபாஸ் ரோட்டில் நிறுத்துவதனால் போக்குவரத்து இடையூறும், பல்வேறு விபத்துக்களும் நிகழ்வதனால், நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி, காவல் துறை இணைந்து அத்தகைய அனுமதி பெறாத கடைகளையும், வாகனங்களையும் அப்புறப்படுத்தி சீரான சாலைப்போக்குவரத்திற்கு வழிவகை செய்தனர். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வந்தனர்.