அரியலூர்,டிச;04
அரியலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் திருமண விழாவிற்கான பிரம்மாண்டமான விழா அரங்கத்தின் ஏற்ப்பாட்டு பணிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான காமராஜ் பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன்,முன்னாள் யூனியன் துணை சேர்மன் ராஜேஸ்வரி தம்பதியர் மகள் பார்கவி
இவருக்கும்,
பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நாகராஜன்,
சித்தளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
இந்திரா தம்பதியர் மகன் மதன்ராஜ்
இருவருக்கும் வருகின்ற டிசம்பர் 6 ம் தேதி அரியலூரில் திருமணம் நடைபெறவுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள்,எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
திருமணம் அரியலூரில் செந்துறை பைபாஸ் சாலையில் கொல்லாபுரம் இறைவன் நகரில் நடைபெறவுள்ளது.
திருமண அரங்கம் மற்றும் சாப்பாடு நடைபெறும் இடத்திற்கு மிகப் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கலந்து கொள்ளும் இந்த விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணியினை இன்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் எம் எல் ஏவுமான காமராஜ் பார்வையிட்டார்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட அதிமுக செயலாருமான தாமரை ராஜேந்திரன்,
கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்பி சந்திரகாசி ,பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், மாவட்ட அவை தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர் மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மற்றும்
மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர ,கிளைக் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ்
எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் கூறிய குறித்து கேட்ட கேள்விக்கு
இது முதலமைச்சருக்கு அழகல்ல.
விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வது என்பது எதிர்கட்சிகளின் கடமை அந்த கடமையை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்க கூடிய எடப்பாடியார் பழனிச்சாமி.
பதில் சொல்வதற்கு பதிலாக முதலமைச்சர் இவ்வாறு சொல்லி இருப்பது என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
அனைவரும் முகம் சுளிக்க கூடிய வகையில் தான் இந்த பதிலை மக்கள் பார்க்கிறார்கள்.
இதில் ஏதோ ஒரு நெருக்கடி இருப்பதாக உணர்கிறோம்
தொடர்ந்து பொறுப்புணர்வோடு பதில் சொல்ல வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதில் அவருக்கு பொறுப்புணர்வு இல்லையோ என்ற அச்சம் அனைவரிடமும் இருந்து வருகிறது.
நெருக்கடி குறித்து கேட்ட கேள்விக்கு
அவருக்கு அரசியல் நெருக்கடியாக இருக்கலாம், அரசு நெருக்கடியாக இருக்கலாம், கட்சி நெருக்கடியாக இருக்கலாம் எனக்கூறினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்