சிவகங்கை:டிச:03 சிவகங்கை மாவட்டம் அழகிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்து விட்டார். இவரது மனைவி சத்யாபாண்டி இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சிவகங்கை ரயில் மூலமாக குஜராத் மாநிலம் சென்று விட்டார்.
குஜராத் போலிசார் மூலம் சத்யாபாண்டி மீட்கப்பட்டு குஜராத் லேடி ரிஸப்சன் செண்ட்டரில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில்
அவரது முகவரி சிவகங்கை மாவட்டம் என்பதால் குஜராத் மாநில பெண் ஊழியர்கள் மூலம் சிவகங்கை அழைத்து வரப்பட்டார்.
லேடி ரிஸப்சன் செண்ட்டர் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சத்யா பாண்டியின் சொந்த ஊரான அழகிச்சிபட்டி சென்று விசாரணை நடத்தியதில் அவர் இதே ஊரைச் சேர்ந்தவர் என்பது உறுதியானதையடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.