ராமநாதபுரம், டிச.1-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் எழுச்சி நாள் நவம்பர் 30 ம் தேதி கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் கமுதி அரண்மனை மேடு ஆதரவற்றோர் குழந்தைகள் மையம் மற்றும் அபிராமம் நேச கரங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணை செயலாளர் ஜெயபாரதன் மாநில மகளிர் அணி இணை செயலாளர் செந்தாமரை, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், கமுதி ஒன்றிய தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றிய பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இதர ஊராட்சி செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டு எழுச்சி நாளை எழுச்சியுடன் கொண்டாடினார்கள்.