நாகர்கோவில் டிச 1
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அமைச்சூர் குத்துச்சண்டை கழகம் சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் துவங்கியது. இந்த போட்டிகளை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி துவக்கி வைத்தார். ஜூனியர் சீனியர் பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றது. மாணவர்களை குத்துச்சண்டையில் உலக தரத்தில் கொண்டு செல்வதன் நோக்கத்திற்காகவே இந்த குத்து சண்டை போட்டி நடத்தப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். மேலும் நடந்து முடிந்த பள்ளி அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் ஏராளமான மாணவிகள் தங்கம் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும் தேசிய அளவில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். தமிழக அரசு தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மாணவர்களை குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும், உலக அளவிலும் கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.