தஞ்சாவூர். டிச. 2
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் தஞ்சாவூர் மாவட்ட கிளை சார்பில் இரத்த வங்கியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வாழ்நாள் உறுப்பினர் கள் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி புரவலர் டாக்டர் மனோஜ் குமார் மற்றும் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்வில் பொருளாளர் ஷேக் நாசர், கும்பகோணம் ரோட்டரி இரத்த வங்கி பொறுப்பாளர் அப்துல் கபூர், வேளாண்மை குழு உறுப்பினர் பிரகதீஷ், அலுவலக மேலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.