நாகர்கோவில் டிச 2
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வரும் 02.12.2024 மற்றும் 03.12.2024 தேதிகளில் திருவிழாவை காணவரும் பத்தர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி, இருளப்பபுரம், ஈத்தாமொழி, பீச்ரோடு வழியாக செட்டிக்குளம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக A.R. கேம்ப் சாலை, பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி சந்திப்பு, இராமன்புதூர், செட்டிகுளம் வழியாக செல்லவேண்டும். அதேபோல்
வடசேரி, கோர்ட் ரோடு மற்றும் அண்ணா பேருந்து நிலையம் வழியாக கன்னியாகுமரி, நாகர்கோவில் இரயில் நிலையம், அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு, P.W.D. சாலை வழியாக செட்டிக்குளம், இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். அதேபோல்
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து Cape ரோடு வழியாக கன்னியாகுமரி. தக்கலை, மார்த்தாண்டம் மற்றும் குளச்சல், திங்கள்நகர் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் அண்ணா பேருந்து நிலையம், வேப்பமூடு சந்திப்பு, கோர்ட் ரோடு, டதி பள்ளி சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் எனவும்,
கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் வெள்ளமடம், தேரூர், சுசீந்திரம் வழியாக செல்ல வேண்டும் எனவும் கோட்டார் சவேரியார் ஆலயத்திருவிழாவை காண வருகை தரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை கீழ்க்கண்ட 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் தங்களது சொந்த பொறுப்பில் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கான பகுதிகளாக
வேப்பமூடு பார்க்கிங்,
வசந்தம் மருத்துவமனை பின்புறம் பார்க்கிங் (டென்னிசன் சாலை அருகில்),
நாகராஜா திடல் பார்க்கிங்,
கோர்ட் ரோடு பார்க்கிங்,
இரயில்வே ரோடு பார்க்கிங்,
அநாதை மடம் பொருட்காட்சி திடல் பார்க்கிங் (பீச் ரோடு),
கோட்டார் மாநகராட்சி லாரி செட் (நாராயணகுரு மண்டபம் அருகில்), கார்மல் பள்ளி மைதானம் (ராமன்புதூர் சாலை),
Bishop Remigius CBSE பள்ளி பார்க்கிங் (ராமன்புதூர் சாலை)கிருஷ்ணா மஹால் பார்க்கிங் (செட்டிகுளம் அருகில்) ஆகிய பகுதிகளாகும்.
மேலும் இந்த போக்குவரத்து மாற்றம் 02.12.2024-ம் தேதி மதியம் சுமார் 01.00 மணி முதல் 03.12.2024 அன்று இரவு திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பக்தர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் காவல்
துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.