மயிலாடுதுறையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சார்பில் “எங்கள் சமையலறை, எங்கள் பொறுப்பு” என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் இணைந்து நடத்திய பாதுகாப்புடன் கூடிய சமையல் போட்டி மயிலாடுதுறையில் நடத்தப்பட்டது. சிறப்பாலை பலர்களாக மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மேற்கொண்டு நிலை அலுவலர் ரமேஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை பிரிவு உதவி மேலாளர் டி.சாய் கார்த்தி, ஆலை மேலாளர் எஸ்.பார்த்திபன் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 விநியோகஸ்தர்கள் இணைந்து இந்த போட்டியை நடத்தினர்.
இதில் பெண்கள் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை தயாரித்து அசத்தினர். குறிப்பாக, வரகு கேசரி, கருப்பு கவுனி இட்லி,நவக்கிரகங்களை குறிக்கும் கோதுமை, அரிசி, துவரை, பச்சை பயறு, கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு ஆகிய 9 தானியங்களில் செய்த லட்டு, கருப்பு கவுனி கஞ்சி, கொள்ளு லட்டு,
வரகு உப்புமா,
ராகி களி-பொறுவாய் கருவாட்டு குழம்பு,
நவதானிய தேங்காய் பால் பாயசம், மரவள்ளி கிழங்கு புட்டு, சப்ஜி-டால் ஃப்ரை, திணை கேசரி, ராகி லட்டு
பச்சை பயிறு புட்டு உள்ளிட்ட சைவ அசைவ உணவு வகைகள் நடுவர்களையும் பார்வையாளர்களையும் ரசித்து, ருசிக்க வைத்தது. முடிவில் மூன்று சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக எரிவாயு செல்கின்றை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டு எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக எவ்வாறு பயன்படுத்துவது, தீ விபத்து ஏற்பட்டால் தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார்.