நாகர்கோவில் நவ 30
தழ்நாடு அஞ்சல் வட்டம் தனது 14வது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சியான “TANAPEX 2025” ஐ 29 ஜனவரி 2025 முதல் பிப்ரவரி 1, 2025 வரை நடத்துகிறது. இதையொட்டி, 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான கோட்ட அளவிலான தபால்தலை வினாடி வினா போட்டி 29 நவம்பர் 2024 அன்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது. இப்போட்டியில் இவான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி, பறக்கை மாணவர்கள் முதலிடத்திலும்,
அமலா கான்வென்ட் பள்ளி, தக்கலை மாணவர்கள் இரண்டாம் இடத்திலும், ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கூட்டுமங்கலம் மாணவர்கள் மூன்றாம் இடத்திலும் தேர்வு செய்யப்பட்டனர். கோட்ட அளவில் முதலிடம் வகித்த இவான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி, பறக்கை மாணவர்கள் மதுரையில் நடைபெறும் மண்டல அளவிலான வினாடிவினா போட்டியில் பங்கேற்க உள்ளனர். மண்டல அளவில் வெற்றி பெறும் அணி, பிப்ரவரி 01, 2025 அன்று சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு வட்ட அளவிலான வினாடிவினா போட்டியில் பங்கேற்க உள்ளது.