திருப்புவனம்
நவ:29
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் விளக்கு எம்ஜிஆர் நகர் பகுதியில் மழை நீர் வீதி முழுவதும் தேங்கியுள்ளது. பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல முடியவில்லை எனவும் தேங்கிய நீரை அப்புறப்படுத்த கோரி மடப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் சபர்மதி கோபியிடம் தெரிவித்துள்ளனர். அவர் உங்கள் பகுதி மக்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் சரி செய்ய முடியாது
என கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பூவந்தி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.